Oplus_131072
உடல்நலத்திற்கு பல நன்மைகளை வழங்கும் பீட்ரூட் பலரும் தினசரி உணவில் சேர்த்து வருகிறார்கள். ரத்த சோகையை குறைக்கவும், உடல் சக்தியை அதிகரிக்கவும் இது உதவுகிறது.
இருப்பினும், இதை அளவுக்கு மீறி சாப்பிடுவது சிலருக்கு சிக்கல்களை ஏற்படுத்தும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
குறிப்பாக குறைந்த ரத்த அழுத்தம் (Low BP) கொண்டவர்கள் பீட்ரூட்டை அதிகமாக சாப்பிட வேண்டாம் என கூறப்படுகிறது. இது ரத்த அழுத்தத்தை மேலும் குறைக்கும் தன்மை கொண்டதால் மயக்கம், பலவீனம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும் அபாயம் உள்ளது.
மேலும், சிறுநீரக கற்கள் பிரச்சனை உள்ளவர்கள் கவனம் தேவை. பீட்ரூட்டில் அதிக அளவில் ஆக்சிலேட் (Oxalate) இருப்பதால், அதை அதிகமாக எடுத்தால் கற்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த டைம்ல தயிர் சாப்பிட்டால் ஆபத்து நிச்சயம்! சாப்பிட சிறந்த நேரம் எது? இதில் கொட்டிகிடக்கும் பலன்கள்…
சிலருக்கு பீட்ரூட் ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் தோலில் அரிப்பு, எரிச்சல், சளி, காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் வெளிப்படலாம்.
எனவே, பீட்ரூட்டை உணவில் சேர்ப்பது நல்லதுதான் என்றாலும், அதை அளவோடு மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். உடல்நிலை அடிப்படையில் மருத்துவர்களின் ஆலோசனையுடன் பயன்படுத்துவது பாதுகாப்பானது.
கீரை சாப்பிடுவது நல்லதுதான்! ஆனால் இந்த உடல்நலப் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் தொடாதீங்க..!




