சுவையான வாத்து மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்..??

Oplus_131072

சுவையான வாத்து மிளகு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்

தேவையான பொருட்கள் :

வாத்து 1
மிளகு தூள் 1 தேக்கரண்டி
சீரகம் தூள் 1 தேக்கரண்டி
சோம்பு 1/2 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
பொடியாக நறுக்கிய வெங்காயம் ஒன்று
தக்காளி அரை நறுக்கியது
கருவேப்பிலை
மஞ்சள் தூள்
உப்பு
குழம்பு மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி
எண்ணெய் ( கடலை எண்ணெய் சிறப்பு)

செய்முறை விளக்கம் :

ஒரு வாணலியில் எண்ணெய் சேர்த்து கால் டீஸ்பூன் சோம்பு பொடியாக நறுக்கிய வெங்காயம் தக்காளி கருவேப்பிலை சேர்த்து வதக்க வேண்டும் வெங்காயம் தக்காளி வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும் அதில் உப்பு மஞ்சள்தூள் பின் குழம்பு மிளகாய்த்தூள் 1 தேக்கரண்டி சேர்த்து வதக்கி கழுவி வைத்திருந்தவாத்தை அதில் சேர்த்து சுடு தண்ணீர் ஊற்றி கிளறி விட்டு மூடி 20 இருந்து40 நிமிடம் வேக வைக்க வேண்டும் பொதுவாக வாத்து அவ்வளவு சீக்கிரமாக வெந்து விடாது உங்களுக்கு தேவைப்பட்டால் குக்கரில் மாற்றி கூட ஒரு விசில் வைத்து வேக வைத்து விடலாம் ஈசியாக வேலை முடிந்து விடும் 20 நிமிடம் கழித்து திறந்து பார்த்தால் வாத்து நன்கு சுருண்டு வெந்திருக்கும் அதில் கடைசியாக மிளகு தூள் மற்றும் சீரக தூள் சேர்த்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லி இலையை தூவி சுடச்சுட பரிமாறவும்

ருசி மிகவும் அருமையாக இருக்கும்.

Read Previous

மில்க் அல்வா செய்வது எப்படி..??

Read Next

சாண்ட்விச் பஜ்ஜி செய்வது எப்படி..??

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular