சென்னை ஐ.ஐ.டி. நடத்தும் GATE 2027 நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு தேதி தொழில்நுட்ப காரணங்களால் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
முன்னதாக ஆகஸ்ட் 14-ம் தேதி விண்ணப்பப் பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஆகஸ்ட் 27 முதல் செப்டம்பர் 27 வரை மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அபராதக் கட்டணத்துடன் அக்டோபர் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. GATE 2027 தேர்வு 2027 பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.




