வங்கி வேலைக்கு தயாராகும் இளைஞர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், இந்திய வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (IBPS) நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் Probationary Officer (PO) / Management Trainee (MT) பணியிடங்களுக்கான புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மொத்தம் 7,365 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஏதேனும் ஒரு துறையில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்தவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு அடிப்படை சம்பளமாக ரூ.48,480 வழங்கப்படும்.
பணியிட விவரங்கள்
- நிறுவனம்: Institute of Banking Personnel Selection (IBPS)
- பதவி: Probationary Officer (PO) / Management Trainee (MT)
- மொத்த காலியிடங்கள்: 7,365
- பணியிடம்: இந்தியா முழுவதும்
- ஆரம்ப சம்பளம்: ரூ.48,480
கல்வித் தகுதி
ஏதேனும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு (Any Degree) முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு
- குறைந்தபட்ச வயது: 20
- அதிகபட்ச வயது: 30
வயது தளர்வு:
- SC / ST – 5 ஆண்டுகள்
- OBC – 3 ஆண்டுகள்
- PwBD (General / EWS) – 10 ஆண்டுகள்
- PwBD (OBC) – 13 ஆண்டுகள்
- PwBD (SC / ST) – 15 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம்
- SC / ST / PwBD – ரூ.175
- மற்ற அனைத்து பிரிவினரும் – ரூ.850
தேர்வு முறை
- Preliminary Examination
- Main Examination
- Interview
முக்கிய தேதிகள்
- விண்ணப்பம் தொடங்கிய தேதி: 01.07.2026
- விண்ணப்பிக்க கடைசி தேதி: 26.07.2026
விண்ணப்பிக்கும் முறை
IBPS அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து, தேவையான விவரங்கள் மற்றும் ஆவணங்களை பதிவேற்றி, விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். இறுதியாக விண்ணப்பத்தை சரிபார்த்து சமர்ப்பித்த பிறகு அதன் நகலை பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்வது நல்லது.
குறிப்பு: விண்ணப்பிக்கும் முன் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கல்வித் தகுதி, வயது வரம்பு மற்றும் பிற தகுதிகளை முழுமையாக சரிபார்த்து விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு :
https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Notification_CRP-PO-XVI_Final_V1_30.06.2026.pdf




