“அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம்.. இனி ஆளும் கட்சியாக வர வேண்டும்!” – திருமாவளவன்!

 

 

உளுந்தூர்பேட்டையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ‘தமிழ் தேசிய மாநாடு’ இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

 

மாநாட்டில் எதிர்பார்த்ததை விட கட்டுக்கடங்காத அளவில் ஏராளமான தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, பாதுகாப்பு மற்றும் கூட்டத்தின் சூழலை கருத்தில் கொண்டு தனது பேச்சை பாதியிலேயே நிறுத்திக்கொள்வதாக திருமாவளவன் அறிவித்தார்.

 

தொடர்ந்து பேசிய அவர், “விசிக தற்போது அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம். இனி வரும் காலத்தில் ஆளும் கட்சியாக வர வேண்டும்” என தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

 

மேலும், கட்சியின் வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்று, தமிழக அரசியலில் விசிகவின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தையும் அவர் தனது பேச்சில் வெளிப்படுத்தினார்.

Read Previous

“இனி தவெக அரசுடன் இணைந்தே பயணிப்போம்!” – திருமாவளவன்!

Read Next

70 வயதுக்கு மேற்பட்ட 38 லட்சம் பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை! – தமிழக அரசு புதிய அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular