70 வயதுக்கு மேற்பட்ட 38 லட்சம் பேருக்கு இலவச மருத்துவ சிகிச்சை! – தமிழக அரசு புதிய அறிவிப்பு!

 

 

தமிழ்நாட்டில் முதல்முறையாக 70 வயதுக்கு மேற்பட்ட சுமார் 38 லட்சம் மூத்த குடிமக்களுக்கு, வருமான உச்சவரம்பின்றி கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை வழங்கும் வகையில் ‘முதலமைச்சரின் முதியோர் காப்பீட்டுத் திட்டம்’ செயல்படுத்தப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.

 

இந்தத் திட்டத்தின் மூலம், பொருளாதார நிலையைப் பொருட்படுத்தாமல் தகுதியான மூத்த குடிமக்கள் தேவையான மருத்துவ சிகிச்சைகளை கட்டணமின்றி பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

 

மேலும், 30 வயதைக் கடந்த அனைவருக்கும் இலவச முழு உடல் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

 

மூத்த குடிமக்களின் மருத்துவப் பாதுகாப்பை உறுதி செய்வதுடன், நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பதற்கும் இந்த நடவடிக்கைகள் உதவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

“அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருக்கிறோம்.. இனி ஆளும் கட்சியாக வர வேண்டும்!” – திருமாவளவன்!

Read Next

“த்ரிஷாவுக்கு VVIP அந்தஸ்தா?” – முதல்வர் விஜயை விமர்சித்த முன்னாள் அமைச்சர்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular