அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி தலைமையில் செயல்பட்டு வந்த அதிருப்தியாளர்கள் அணியில் தற்போது திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சேலத்தில் நடைபெறும் அதிமுக கண்டன ஆர்ப்பாட்டத்தில் தங்கமணி பங்கேற்க மாட்டார் என எஸ்.பி. வேலுமணி நேற்று அறிக்கை வெளியிட்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் உத்தரவை ஏற்று சேலத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தான் பங்கேற்க உள்ளதாக தங்கமணி அறிவித்துள்ளார். அவரது இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
தங்கமணியின் இந்த நிலைப்பாட்டால், எஸ்.பி. வேலுமணி தலைமையில் செயல்பட்டு வந்த ஆதரவாளர்கள் அணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த அணியில் பிளவு உருவாகியுள்ளதாகவும் அதிமுக வட்டாரங்களில் பேசப்படுகிறது.




