“இபிஎஸ் முதலில் உட்கட்சி பிரச்னையை தீர்க்கட்டும்” – அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார்!

 

 

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும், திமுகவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக செயல்பட்டு வருவதாக அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் குற்றம்சாட்டியுள்ளார்.

 

தற்போதைய சூழலில் அதிமுகவில் வெறும் 10 பேர் மட்டுமே இருப்பதாக விமர்சித்த அவர், முதலில் தனது கட்சியில் நிலவி வரும் உட்கட்சி பிரச்னைகளை எடப்பாடி பழனிசாமி தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

 

இபிஎஸ் நடத்தி வரும் போராட்டங்கள் மக்கள் நலனுக்காக அல்ல என்றும், தன் பக்கம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை வெளிப்படுத்துவதற்காகவே இதுபோன்ற போராட்டங்களை நடத்தி வருவதாகவும் அமைச்சர் சாடியுள்ளார்.

 

மேலும், அதிமுகவின் உள்கட்சி நிலவரத்தை சரிசெய்வதில் கவனம் செலுத்தாமல், மற்ற கட்சிகளை விமர்சிப்பதில் மட்டும் எடப்பாடி பழனிசாமி கவனம் செலுத்துவதாகவும் சி.டி.ஆர். நிர்மல் குமார் தெரிவித்துள்ளார்.

Read Previous

“விவசாயிகளுக்காக குரல் கொடுப்பது அதிமுக மட்டுமே” – இபிஎஸ்!

Read Next

அதிமுகவில் திடீர் திருப்பம்: வேலுமணி அணியில் விரிசலா?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular