சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கும் போது அதிமுகவின் கொறடா யார் என்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக இரு அணிகளாகப் பிரிந்ததைத் தொடர்ந்து, சட்டமன்றத்தில் கட்சியின் கொறடா யார் என்பதில் குழப்பம் நீடித்து வந்தது.
இந்நிலையில், அதிமுக சார்பில் அக்ரி கிருஷ்ணமூர்த்தி கொறடாவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரின் போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.




