கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி பெறுவதற்காக சதுர அடிக்கு ரூ.27 முதல் ரூ.35 வரை வசூலிக்கப்பட்டு வந்த கட்சி நிதியை தமிழக அரசு ரத்து செய்துள்ளது.
அரசின் இந்த முடிவுக்கு கிரெடாய் உள்ளிட்ட கட்டுமான அமைப்புகள் வரவேற்பு தெரிவித்துள்ளன. கட்டுமானத் துறையில் நீண்ட காலமாக நிலவி வந்த கூடுதல் செலவுச் சுமை குறையும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கட்சி நிதி செலவுகள் தவிர்க்கப்படுவதால், புதிதாக தொடங்கப்படும் குடியிருப்பு திட்டங்களில் வீடுகளின் விலையை சதுர அடிக்கு ரூ.100 வரை குறைக்கும் வாய்ப்பு உள்ளதாக கட்டுமானத் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்த நடவடிக்கை வீடு வாங்கும் பொதுமக்களுக்கு சாதகமாக அமையும் எனவும், கட்டுமானத் துறையின் வளர்ச்சிக்கு உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.




