நெல்லை வெள்ளாங்குளியைச் சேர்ந்த நெசவாளர் ராம்குமாரின் 3 மகன்களான வெங்கட் ஸ்ரீ, அருண், தரண் ஆகியோர் அரசுப் பள்ளியில் படித்து NEET தேர்வில் சாதனை படைத்துள்ளனர்.
7.5% அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டின் கீழ், அருணுக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், தரணுக்கு கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லூரியிலும், வெங்கட் ஸ்ரீக்கு நாகர்கோவில் பல் மருத்துவக் கல்லூரியிலும் இடம் கிடைத்துள்ளது.
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்களும் மருத்துவத் துறையில் கால்பதிக்க உள்ள நிலையில், அவர்களுக்கு குடும்பத்தினர், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.




