பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் தகுதியான விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000, தலா ரூ.2,000 வீதம் 3 தவணைகளாக வழங்கப்படுகிறது.
23வது தவணை கடந்த ஜூன் 20ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில், அடுத்ததாக 24வது தவணை அக்டோபர் முதல் வாரத்தில் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
எனினும், 24வது தவணை குறித்த அதிகாரப்பூர்வ தேதியை மத்திய அரசு இதுவரை அறிவிக்கவில்லை.
எனவே, தவணை வெளியாகும் முன் விவசாயிகள் தங்களது e-KYC, வங்கிக் கணக்கு மற்றும் பயனாளி நிலையை அதிகாரப்பூர்வ PM-Kisan இணையதளத்தில் சரிபார்த்துக் கொள்வது அவசியம்.




