தமிழக கடலோரப் பகுதிகளின் கீழ்மட்ட வளிமண்டலத்தில் பலவீனமான காற்றழுத்த தாழ்வுப்பாதை நிலவி வருவதால், மாநிலத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை (ஆகஸ்ட் 15) மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய மாவட்டங்கள், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் மதுரை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளை ஒட்டிய பிற மாவட்டங்கள் மற்றும் வட கடலோர தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
சில இடங்களில் இடி, மின்னலுடன் பலத்த காற்றும் வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.




