கர்நாடக மாநிலம் மங்களூருவில் ஆன்லைனில் ஆர்டர் செய்த கோழிக்கறி கெட்டுப்போய் இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் புகார் அளித்ததைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் KFC உணவகத்தில் திடீர் சோதனை நடத்தினர்.
K.S. ராவ் சாலையில் உள்ள சிட்டி சென்டர் வளாகத்தில் செயல்பட்டு வரும் KFC கிளையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டிருந்த குடோன் சீல் வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், உணவகத்தில் இருந்த பல்வேறு உணவுப் பொருட்களின் மாதிரிகளை அதிகாரிகள் சேகரித்தனர். அவை பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
ஆய்வக பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.




