முதலில் கேழ்வரகு மாவை லேசாக வறுத்துக்கொள்ளுங்கள். அதனுடன் அரிசி மாவு மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும். பின்னர் கொதிக்கும் சுடுநீரை சிறிது சிறிதாக ஊற்றி மாவை நன்றாக பிசைந்து, சுமார் 15 நிமிடங்கள் ஊறவிடவும். அதன் பிறகு சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து மாவை மென்மையாக பிசைந்துகொள்ள வேண்டும். தயாரான மாவை இடியாப்ப அச்சில் நிரப்பி, எண்ணெய் தடவிய இட்லித் தட்டுகளில் பிழியவும். இதனை இட்லி பாத்திரத்தில் வைத்து சுமார் 7 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுக்கவும். சிறிது நேரம் ஆறவிட்ட பிறகு மெதுவாக எடுத்தால், சுவையான மற்றும் மென்மையான கேழ்வரகு இடியாப்பம் தயார்!




