‘சுப்ரமணியபுரம் 2’ வருமா? சசிகுமார் சொன்ன முக்கிய தகவல்!

 

 

2008-ல் சசிகுமார் இயக்கி, தயாரித்து, நடித்த ‘சுப்ரமணியபுரம்’ திரைப்படம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்தது. இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்த கேள்விக்கு சசிகுமார் சமீபத்தில் விளக்கம் அளித்துள்ளார். ‘சுப்ரமணியபுரம் 2’ படத்தை இயக்கும் எந்தத் திட்டமும் தற்போது இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், படம் வெளியாகி 18 ஆண்டுகள் கடந்த பிறகும் ரசிகர்களின் மத்தியில் அதற்கான வரவேற்பும் நற்பெயரும் தொடர்ந்து வருவதாக குறிப்பிட்ட அவர், அந்தப் பெருமையை பாதிக்க விரும்பவில்லை என்றும் தெரிவித்துள்ளார். இதனால் ‘சுப்ரமணியபுரம்’ ரசிகர்களின் நீண்டநாள் எதிர்பார்ப்புக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Read Previous

ஆரோக்கியமும் சுவையும் நிறைந்த கேழ்வரகு இடியாப்பம்!

Read Next

“ஜோசப் விஜய் என்று சொன்னால் வலிக்குதா?” – சீமானை சாடிய நடிகை விஜயலட்சுமி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular