கேரள மாநிலத்தின் பெயரை அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என மாற்றுவதற்கான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக கேரள சட்டப்பேரவையில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெயர் மாற்ற மசோதா நிறைவேற்றப்பட்டது.
தற்போது குடியரசுத் தலைவரின் இறுதி ஒப்புதலும் கிடைத்துள்ளதால், இனி அந்த மாநிலம் அதிகாரப்பூர்வமாக ‘கேரளம்’ என அழைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




