இன்றைய தங்கம் விலை: சரிவுக்கு முற்றுப்புள்ளி.. சவரனுக்கு ₹120 உயர்வு..!!

தொடர்ந்து சில நாட்களாக சரிவை சந்தித்து வந்த தங்கத்தின் விலை இன்று மீண்டும் உயர்வை பதிவு செய்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிட்டிருந்த பொதுமக்கள் மற்றும் நகை பிரியர்கள் கவனத்துடன் விலையை கண்காணித்து வருகின்றனர்.

சென்னையில் இன்று 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ₹15 உயர்ந்து ₹13,150-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஒரு சவரன் தங்கத்தின் விலை ₹120 அதிகரித்து ₹1,05,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றைய நிலவரப்படி, ஒரு கிராம் தங்கம் ₹13,135-க்கும், ஒரு சவரன் ₹1,05,080-க்கும் விற்பனையாகி வந்தது. இன்றைய உயர்வால் தங்கம் மீண்டும் ஏற்றம் கண்டுள்ளது.

இதற்கிடையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ₹235-க்கும், ஒரு கிலோ வெள்ளி ₹2,43,000-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Read Previous

மைதானத்தில் மாத்திரை அரைத்த அமைச்சர்.. மு.க.ஸ்டாலின் விமர்சனம்..!!

Read Next

ஆரோக்கியமான ஓட்ஸ் கார பணியாரம் வீட்டிலேயே செய்வது எப்படி?.. முழு செய்முறை உள்ளே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular