ஈரோட்டில் 85 வயது மூதாட்டிக்கு பாலியல் வன்கொடுமை? மர்ம நபருக்கு போலீசார் வலை!

 

 

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த 85 வயது மூதாட்டி, மர்ம நபரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

 

வீட்டில் ரத்தக் காயங்களுடன் கிடந்த மூதாட்டியை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

 

சம்பவம் குறித்து தகவல் அறிந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மூதாட்டியை தாக்கி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் மர்ம நபர் குறித்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

இச்சம்பவம் அந்தியூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

விசிக மாநாடு: உளுந்தூர்பேட்டையில் நாளை மதுக்கடைகள் மூடல்!

Read Next

“யார் அமைச்சர்? யார் எம்எல்ஏ? முதல்வருக்கே தெரியவில்லை!” – உதயநிதி விமர்சனம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular