கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நாளை (ஆக.17) விசிக சார்பில் தமிழ்த் தேசிய எழுச்சி மாநாடு நடைபெற உள்ளது.
இதையொட்டி, உளுந்தூர்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் செயல்படும் மதுக்கடைகளை நாளை ஒருநாள் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மாநாட்டை முன்னிட்டு சட்டம்-ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல் இருக்கவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.




