உக்ரைன் பயணிகள் ரயில் மீது ரஷ்யா டிரோன் தாக்குதல்: 2 பேர் பலி!

 

உக்ரைனின் ஒடேசா பிராந்தியத்தில் சென்று கொண்டிருந்த பயணிகள் ரயிலின் இன்ஜின் மீது ரஷ்ய ராணுவம் டிரோன் தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த தாக்குதலில் ரயிலின் ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தாக்குதலால் ரயிலின் முன்பகுதி தீப்பற்றி எரிந்தது.

எனினும், ரயிலில் பயணித்த பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

உக்ரைன்-ரஷ்யா இடையேயான போர் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், பயணிகள் ரயிலை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Read Previous

விவிஎஸ் லக்ஷ்மணுக்கு BCCI-யில் புதிய முக்கிய பொறுப்பு!

Read Next

முளைகட்டிய பச்சைப்பயறு சாப்பிடுவதால் கிடைக்கும் பலன்கள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular