புரதம், நார்ச்சத்து மற்றும் அத்தியாவசிய வைட்டமின்கள் நிறைந்த முளைகட்டிய பச்சைப்பயறை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது உடலுக்கு பல்வேறு நன்மைகளை அளிக்கும்.
இது செரிமான மண்டலத்தை சீராக செயல்படச் செய்வதுடன், உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது. மேலும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.
முளைகட்டிய பச்சைப்பயறு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்த உதவுவதுடன், இதய ஆரோக்கியத்தை பாதுகாக்கவும் துணைபுரிகிறது.
மேலும், சருமத்தை பொலிவுடன் வைத்திருக்கவும் முளைகட்டிய பச்சைப்பயறு உதவுவதாக கூறப்படுகிறது.




