Oplus_131072
தேவையான பொருட்கள்:
அகல் விளக்கு: 1
எலுமிச்சை பழம்: பாதியளவு
உப்பு: சிறிதளவு
கற்பூரம்: 2 துண்டுகள்
செய்முறை:
1. முதலில் ஒரு சுத்தமான அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள்.
2. அதில் பாதியளவு எலுமிச்சை சாற்றினை நன்கு பிழிந்து ஊற்றவும்.
3. எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு உப்பினைச் சேர்த்து லேசாகக் கலக்கவும்.
அதன் மேல் இரண்டு கற்பூரத் துண்டுகளை வைக்கவும்.
4. இப்போது ஒரு தீக்குச்சியால் கற்பூரத்தை ஏற்றி விடவும்.
5. இதிலிருந்து வெளிவரும் நறுமணமானது உங்கள் வீட்டிற்குள் கொசுக்கள் வராமல் தடுக்கும்.
இந்த எளிய முறையில் எந்தவிதமான ரசாயனக் கலப்பும் இல்லாததால் இது உடலுக்கு மிகவும் பாதுகாப்பானது.




