தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அருகே தற்கொலைக்கு முயன்ற ஒருவரை காப்பாற்ற சென்ற ரயில்வே கேட் கீப்பர் ரயிலில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கோபுரராஜபுரம் ரயில்வே கேட் பகுதியில் ஒருவர் தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. அவரை காப்பாற்றுவதற்காக கேட் கீப்பர் ராகுல் விரைந்து சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக ரயிலில் இருவரும் சிக்கியதாகவும், இதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த ராகுலுக்கு திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. கணவரின் உயிரிழப்பு குறித்து அறிந்த அவரது மனைவி மற்றும் உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




