இயக்குநராக பல வெற்றிப் படங்களை கொடுத்து பிளாக்பஸ்டர் இயக்குநர் என்ற பெயரைப் பெற்ற லோகேஷ் கனகராஜ், தற்போது நடிகராகவும் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் டிசி.
அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தனது பின்னணி இசை மற்றும் பாடல்கள் மூலம் படத்தின் காட்சிகளுக்கு கூடுதல் வலு சேர்த்துள்ளார். லோகேஷ் கனகராஜுடன் வாமிகா கேபி, சஞ்சனா மற்றும் அவினாஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
6 நாட்களில் ரூ.55 கோடி
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளியான டிசி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. வெளியான முதல் நாளிலிருந்தே படத்தின் வசூலும் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறது.
இந்நிலையில், படத்தின் 6 நாள் உலகளாவிய வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, டிசி திரைப்படம் 6 நாட்களில் உலகம் முழுவதும் ரூ.55 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்து வருவதால், வரும் நாட்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.




