தவெக அரசுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்துள்ள போராட்டங்களில் தாங்கள் பங்கேற்கப் போவதில்லை என முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள கடிதத்தில், நிர்வாகிகள் தங்களது சொந்த மாவட்டங்களை விடுத்து வேறு மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த அறிவுறுத்தப்பட்டிருப்பதை ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளனர். அதேநேரத்தில், அதிமுக சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களுக்கு தங்களது முழு ஆதரவு தொடரும் என்றும், ஆனால் குறிப்பிட்ட போராட்டங்களில் நேரடியாக பங்கேற்க மாட்டோம் என்றும் தெரிவித்துள்ளனர். இவர்களின் இந்த முடிவு அதிமுக வட்டாரத்தில் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




