2027-28ஆம் கல்வியாண்டிற்கான உயர்கல்வி மற்றும் பொதுத்துறை நிறுவனப் பணிகளுக்கான GATE 2027 தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்வை ஐஐடி மெட்ராஸ் நடத்துகிறது. இதற்கான ஆன்லைன் பதிவு ஆகஸ்ட் 14, 2026 முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டு புதிதாக ‘ரோபோட்டிக்ஸ் மற்றும் ஆட்டோமேஷன்’ பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. GATE மதிப்பெண்கள் மூன்று ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும். விண்ணப்பக் கட்டணம் பெண்கள், SC/ST மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,000 ஆகவும், பொதுப்பிரிவினருக்கு ரூ.2,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் 2027 பிப்ரவரி 6, 7, 13, 14, 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளன.




