“என்னால் இனி போராட முடியவில்லை” – கண்ணீருடன் ஜி.பி.முத்து வெளியிட்ட வீடியோ வைரல்!

 

 

நிலம் தொடர்பான பிரச்சினையில் தன் மீது பல்வேறு வழக்குகள் மற்றும் புகார்கள் இருப்பதாகக் கூறி, காவல்துறையினர் தன்னை தொடர்ந்து அலைக்கழிப்பதாகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்குவதாகவும் பிக்பாஸ் புகழ் ஜி.பி.முத்து வேதனை தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், காவல்துறை விசாரணைக்கு தன்னை அழைப்பதால் தனது குழந்தைகள் அச்சப்படுவதாகவும், தனது மகனின் மனநிலையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கண்ணீருடன் கூறியுள்ளார்.

 

மேலும், தனது நிலை குறித்து மிகவும் வேதனையடைந்த அவர், “என்னால் இதற்கு மேல் போராட முடியவில்லை” எனக் கூறி, சாத்தான்குளம் சம்பவத்தை குறிப்பிட்டு அதிர்ச்சிகரமான கருத்தையும் தெரிவித்துள்ளார்.

 

ஜி.பி.முத்துவின் இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவரது குற்றச்சாட்டுகள் மற்றும் நிலப் பிரச்சினை தொடர்பான விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

Read Previous

தொழிலாளர்களுக்கு புதிய வசதி! செய்யாறு, கங்கைகொண்டானில் நவீன தங்கும் விடுதிகள்!

Read Next

இனிப்பு இல்லாத உணவும் சர்க்கரையை உயர்த்துமா? இந்த உணவுகளில் கவனம் தேவை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular