சென்னையில் நடைபெற்ற ‘வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர் மாநாடு 2026’-ல், தொழிலாளர்களின் வசிப்பிட வசதிகளை மேம்படுத்தும் வகையில் புதிய தங்கும் விடுதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன.
TNIHPL நிறுவனம் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் ரூ.15.77 கோடி செலவில் 441 ஆண் தொழிலாளர்கள் தங்கும் வகையில் நவீன விடுதி கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
அதேபோல், திருநெல்வேலி மாவட்டம் கங்கைகொண்டானில் ரூ.39.89 கோடி மதிப்பில் 870 பெண் பணியாளர்கள் தங்கும் வகையில் புதிய மகளிர் விடுதியும் திறக்கப்பட்டுள்ளது.
தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான மற்றும் வசதியான தங்குமிடத்தை ஏற்படுத்துவதுடன், தொழில் வளர்ச்சிக்கு தேவையான மனிதவளத்தை ஈர்க்கும் வகையிலும் இந்த வசதிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.




