எவரெஸ்ட் மாரத்தான் சாதனை வீராங்கனைக்கு ‘கல்பனா சாவ்லா விருது’! முதல்வர் விஜய் கவுரவிப்பு!

 

 

சென்னையில் நடைபெற்ற 80-வது சுதந்திர தின விழாவில், துணிவு மற்றும் சாகசச் செயலுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ கோவையைச் சேர்ந்த நௌஷீன் பானுவுக்கு வழங்கப்பட்டது.

 

டென்சிங் ஹிலாரி எவரெஸ்ட் மாரத்தான் போட்டியில் இருமுறை வெற்றி பெற்று சாதனை படைத்த நௌஷீன் பானுவை, முதலமைச்சர் விஜய் விருது வழங்கி கௌரவித்தார்.

 

மேலும், சிறந்த மாவட்ட ஆட்சியருக்கான விருது கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியருக்கும், சிறந்த சமூக சேவகருக்கான விருது திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த மணிமாறனுக்கும் வழங்கப்பட்டது.

 

சுதந்திர தின விழாவில் பல்வேறு துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருதுகள் வழங்கப்பட்ட நிலையில், சாதனையாளர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Read Previous

பிரான்சில் பயங்கர காட்டுத்தீ! 2,700 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம்; மக்கள் வெளியேற்றம்!

Read Next

காங்கிரஸ் முன்னாள் தலைவருக்கு ‘தகைசால் தமிழர்’ விருது! ரூ.10 லட்சம் பரிசும் அறிவிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular