காங்கிரஸ் முன்னாள் தலைவர் கிருஷ்ணசாமிக்கு தமிழ்நாடு அரசின் உயரிய ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டுள்ளது. இவர் பாமக எம்எல்ஏ சௌமியா அன்புமணியின் தந்தையும், பாமக தலைவர் அன்புமணியின் மாமனாரும் ஆவார்.
இந்த விருது அறிவிப்பு காங்கிரஸ் கட்சியினரை திருப்திப்படுத்தும் வகையிலும், பாமகவுடனான அரசியல் நெருக்கத்தை மேலும் வலுப்படுத்தும் வகையிலும் பார்க்கப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது.
இதற்கு முன்பு சங்கரய்யா, நல்லகண்ணு, குமரி அனந்தன், கி.வீரமணி, காதர் மொய்தீன் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.
விருதுடன் பாராட்டுச் சான்றிதழும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் வழங்கப்படுகிறது. தமிழகத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கியவர்களை கவுரவிக்கும் வகையில் இந்த விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.




