ஓணம் பண்டிகையின் முக்கியமான பாரம்பரிய உணவுகளில் ஒன்றான அவியலை வீட்டிலேயே சுலபமாக தயாரிக்கலாம். இதற்கு சௌசௌ, உருளைக்கிழங்கு, கேரட், பூசணிக்காய், வாழைக்காய் மற்றும் வெங்காயத்தை நீளமாக நறுக்கி எடுத்துக்கொள்ளுங்கள்.
நறுக்கிய காய்கறிகளை உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும். பின்னர் தேங்காய் துருவல், பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தை அரைத்து, அந்தக் கலவையை வேகவைத்த காய்கறிகளுடன் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும்.
அடுத்து தயிரை சேர்த்து, மிதமான தீயில் சிறிது நேரம் கிளறி அடுப்பை அணைக்கவும். தயிர் சேர்த்த பிறகு அதிகமாக கொதிக்க விடாமல் இருப்பது அவியலின் சுவையை நன்றாக வைத்திருக்கும்.
இறுதியாக, வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம்பருப்பு மற்றும் வெங்காயத்தை தாளித்து அவியலில் சேர்க்கவும். மேலே கொத்தமல்லித்தழை தூவினால் மணமணக்கும் ஓணம் ஸ்பெஷல் பாரம்பரிய அவியல் தயார்!




