ஓபிஎஸ்-க்கு திமுகவில் முக்கிய பதவி? தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்க திட்டமா?

 

 

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, பின்னர் திமுகவில் இணைந்து எம்எல்ஏவாக உள்ள முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுகவில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

தென்மண்டல பொறுப்பை எதிர்பார்த்து வரும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு, தென்மண்டல அமைப்புச் செயலாளர் பதவி வழங்க திமுக தலைமை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.

 

முன்னதாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி, கடந்த 2009-ம் ஆண்டு ஜனவரி மாதம் திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டு அந்தப் பொறுப்பை வகித்தார்.

 

இந்நிலையில், தென் மாவட்டங்களில் கட்சியை வலுப்படுத்தும் நோக்கில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இந்த முக்கிய பதவி வழங்கப்படலாம் என திமுக வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் வரை இது உறுதி செய்யப்படாத தகவலாகும்.

Read Previous

ஹெல்மெட் இல்லாமல் வரும் போலீசாரின் வாகனம் பறிமுதல்! ஒரு நாள் ‘ஆப்சென்ட்’ போட்டு நடவடிக்கை!

Read Next

பிரான்சில் பயங்கர காட்டுத்தீ! 2,700 ஏக்கர் காடுகள் எரிந்து நாசம்; மக்கள் வெளியேற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular