கணவரை கொலை செய்த மனைவி: கள்ளக்காதலன் உதவியுடன் சதி!

 

டெல்லி சங்கம் விஹார் பகுதியில் ரியல் எஸ்டேட் புரோக்கர் முன்னாலால் (55) கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவரது மனைவி நசியாவே கொலையை செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

முதலில் திருடர்கள் கணவரை கொலை செய்ததாக நசியா நாடகமாடியுள்ளார். பின்னர் போலீஸ் விசாரணையில் உண்மையை ஒப்புக்கொண்ட அவர், சமன் என்ற 25 வயது இளைஞருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் காரணமாக கணவரை கொலை செய்ய திட்டமிட்டது தெரியவந்தது.

சம்பவத்தன்று கணவருடன் உல்லாசமாக இருந்தபோது அவருக்கு மயக்க மாத்திரை கொடுத்துள்ளார். பின்னர் தனது காதலன் சமனின் உதவியுடன் கணவரை கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த கொலை தொடர்பாக நசியா மற்றும் சமனிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் பின்னணி குறித்து மேலும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Read Previous

சின்க்பீல்டு கோப்பையில் பிரக்ஞானந்தா அபார வெற்றி!

Read Next

போதைப்பொருள் புழக்கத்தால் சட்டம் ஒழுங்கு பாதிப்பு: எடப்பாடி பழனிசாமி!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular