அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரில் நடைபெற்று வரும் சின்க்பீல்டு கோப்பை செஸ் தொடரின் 4-வது சுற்றில் தமிழகத்தைச் சேர்ந்த இந்திய கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அபார வெற்றி பெற்றார்.
நெதர்லாந்து வீரர் ஜோர்டான் வான் பாரஸ்டை எதிர்கொண்ட பிரக்ஞானந்தா, ஆட்டத்தில் சிறப்பாக செயல்பட்டு 71-வது காய் நகர்த்தலில் வெற்றியை வசப்படுத்தினார்.
சின்க்பீல்டு கோப்பை தொடரில் பிரக்ஞானந்தாவுக்கு கிடைத்த 2-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் தொடரில் தனது நிலையை அவர் வலுப்படுத்தியுள்ளார்.
4 சுற்றுகள் நிறைவடைந்துள்ள நிலையில் 2 புள்ளிகளுடன் பிரக்ஞானந்தா 2-வது இடத்தில் உள்ளார். அடுத்தடுத்த சுற்றுகளிலும் வெற்றியை தொடரும் முனைப்பில் அவர் உள்ளார்.




