சேலம் ஓமலூர் அருகே காதலிக்கு ஆடம்பர பரிசுகளை வழங்க, தவெக நிர்வாகி தனுஷ் (21) என்பவர் ஆடு திருடிப் பொதுமக்களிடம் தர்மஅடி வாங்கி போலீசில் சிக்கினார். அவருடன் 15 வயது சிறுவனும் பிடிபட்டார். ‘பெண்கள் பாதுகாப்பு’ எனப் பேசும் தவெக தலைவர் விஜய்க்கு, அவரது கட்சியினர் அடுத்தடுத்து பாலியல் புகார்களிலும், இது போன்ற குற்றங்களிலும் சிக்கி வருவது பெரும் தர்மசங்கடத்தையும் விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.




