நடிகர் ரவி மோகனிடம் தனது குழந்தைகளின் படிப்பு மற்றும் இதர செலவுகளுக்காக இடைக்கால ஜீவனாம்சம் கோரி, அவரது மனைவி ஆர்த்தி ரவி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் பரிசீலித்து, ஆர்த்தி ரவியின் இடைக்கால ஜீவனாம்சம் கோரும் மனுவை இன்னும் இரண்டு வாரங்களுக்குள் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்திற்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.




