காவிரி விவகாரம்: கர்நாடகாவில் முழு அடைப்பு! தமிழக பேருந்துகள் எல்லையிலேயே நிறுத்தம்!

Oplus_16908288

 

 

காவிரி நீர் பங்கீடு விவகாரத்தை முன்வைத்து கர்நாடகாவில் கன்னட அமைப்புகள் இன்று (ஆகஸ்ட் 13) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.

 

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசுப் பேருந்துகளை கர்நாடக எல்லையான ஓசூரிலேயே நிறுத்தி வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஓசூர் – கர்நாடகா மற்றும் கர்நாடகா – தமிழ்நாடு இடையே பேருந்துகள் இயக்கப்பட்டாலும், பயணிகளின் எண்ணிக்கை குறைவாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும், சத்தியமங்கலம் வழியாக கர்நாடகாவுக்கு இயக்கப்படும் தமிழக அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் 14 பேருந்துகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிறுத்தப்பட்டுள்ளன.

 

முழு அடைப்பு போராட்டத்தை முன்னிட்டு இரு மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், பயணிகள் பயணத்தை திட்டமிடுவதற்கு முன்பு நிலைமையை அறிந்துகொள்வது நல்லது.

Read Previous

தங்கம் விலை மீண்டும் உயர்வு! சவரன் ரூ.1,13,760-க்கு விற்பனை!

Read Next

திருமண நிச்சயதார்த்தம் நடக்க இருந்த நிலையில் சோகம்! லாரி மோதி இளம்பெண் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular