கேரளாவில் அதிர்ச்சி: 5-ம் வகுப்பு முதல் சிறுமிக்கு தொடர் பாலியல் கொடுமை; 7 பேர் மீது போக்சோ வழக்கு!

 

 

கேரள மாநிலம் பத்தனம்திட்டா பகுதியில் 10-ம் வகுப்பு படித்து வரும் சிறுமி, 5-ம் வகுப்பு படித்த காலம் முதல் தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகக் கூறப்படும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

தனக்கு நேர்ந்த கொடுமைகளை சிறுமி தனது நெருங்கிய தோழிகளிடம் கண்ணீருடன் பகிர்ந்துகொண்டதைத் தொடர்ந்து விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளி நிர்வாகமும், குழந்தைகள் நலக் குழுவினரும் தலையிட்டு சிறுமிக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

 

போலீசார் நடத்திய விசாரணையில், சிறுமியின் தந்தை உள்ளிட்ட 7 பேர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வெவ்வேறு காவல் நிலையங்களில் 7 தனித்தனி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

சிறுமியின் தந்தை வெளிநாட்டில் இருப்பதாகவும், அவரை இந்தியாவுக்கு அழைத்து வந்து விசாரணை நடத்துவதற்கான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வழக்கில் தொடர்புடைய மற்றவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

 

சிறுமியின் பாதுகாப்பு மற்றும் மனநலனுக்கு முக்கியத்துவம் அளித்து, இந்த வழக்கில் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read Previous

தமிழகத்தில் கனமழைக்கு மஞ்சள் எச்சரிக்கை! நீலகிரி, தேனி மாவட்டங்களுக்கு அலர்ட்!

Read Next

டெல்லியில் மனைவி கொலை வழக்கு: சீரியல் பார்த்து குற்றத்தை திட்டமிட்டாரா கணவர்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular