Oplus_131072
கேழ்வரகு தோசை செய்வது எப்படி….
தேவையான பொருட்கள்
கேழ்வரகு – 200 மில்லி
அரிசிமாவு-50மில்லி
வெல்லம்-200மில்லி தூள் செய்தது
ஏலக்காய் பொடி-2 தேக்கரண்டி
தேங்காய்த்துருவல்- 1 கிண்ணம்
செய்முறை
* முதலில் வெல்லத்தை 1 கிண்ணம் தண்ணீரில் போட்டு நன்றாக கரைத்து மண் இல்லாமல் வடிக்கவும்.
* வெல்லக் கரைசலில் கேழ்வரகு மாவு , தேங்காய் துருவல், ஏலப்பொடி இவற்றைப் போட்டு நன்றாகக் கட்டியில்லாமல் கரைக்கவும்.
* தேவையானால் மீண்டும். தண்ணீர் விட்டு கரைக்கலாம். மாவு பதம் ரொம்ப கெட்டியாக இருக்கக்கூடாது.
* அதே சமயத்தில் நீர்க்கவும் இருக்ககூடாது. தோசைக்கல்லில் சிறிதளவு எண்ணெய் தடவி துடைத்து மாவை குழிக்கரண்டியால் மேலிருந்து விட வேண்டும், அப்போது தான் ஒரே அளவாக பரவலாக மாவு கல்லில் விழும்.
* இதற்கு நெய்யும், எண்ணெய்யும் கலந்து தோசை வார்த்தால் வாசனையாக இருக்கும். இதை மிக எளிதான முறையில் செய்யலாம்.இப்போது சுவையான கேழ்வரகு தோசை தயார்.




