Oplus_131072
பச்சரிசி முறுக்கு செய்வது எப்படி….
தேவையான பொருட்கள்
பச்சரிசி – ஒரு கப்
தேங்காய்பால் – 1/2 கப் (அரிசி அரைக்கும் அளவுக்கு இருந்தால் போதுமானது)
மைதா – ஒரு டேபிள்ஸ்பூன்
முட்டை – 1
சர்க்கரை – தேவைக்கு
எள் – சிறிது
உப்பு – சிறுது
எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு
செய்முறை
* முதலில் பச்சரிசியை ஊற வைக்கவும்.
* கால் மூடி தேங்காயின் பால் பிழிந்துகொள்ளவும்.
* மற்ற சாமான்களையும் தயாராக வைக்கவும்.
* அரிசி ஊறியதும் மிக்ஸியில் போட்டு தேங்காய்பால் சேர்த்து மைய அரைக்கவும்.
* கடைசியாக முட்டையை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுக்கவும்.
* இதை ஒரு கிண்ணத்தில் ஊற்றிக்கொண்டு அதில் சர்க்கரையை சேர்த்து கலக்கவும்.
* பிறகு மைதா, எள், உப்பு சேர்த்து கரைத்து சுவை சரி பார்த்து, அரை மணி நேரம் மூடி வைக்கவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி,அடுப்பிலேற்றி எண்ணெய் சூடானதும் முறுக்கு அச்சை எண்ணெயில் போட்டு அது சூடேறும்வரை வைக்கவும்.
* அச்சு சூடானதும் எடுத்து மாவில் முக்கால் பாகம் மூழ்குமாறு செய்து, சூட்டினால் மாவு அச்சில் பிடித்துக்கொள்ளும். அப்படியே அச்சை எண்ணெயில் விடவும்.
* சலசலப்பு அடங்கியதும் அச்சில் பிடித்துக்கொண்டிருக்கும் முறுக்கை கம்பியால் பிரித்துவிடவும்.பிரித்ததும் திருப்பிவிட்டு வெந்ததும் எடுக்கவும்.இப்போது சுவையான பச்சரிசி முறுக்கு தயார்.




