Oplus_16908288
காஞ்சிபுரம் அருகே படுநெல்லி கிராமத்தில் கோயில் திருவிழாவின்போது ஏற்பட்ட தகராறில் சந்துரு, விக்கி ஆகிய இரு இளைஞர்கள் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுபோதையில் இருந்த கும்பல், கானா பாடல் போடுமாறு கேட்டதாகவும், அதற்கு இருவரும் மறுப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து ஏற்பட்ட மோதலில் இருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் மற்றும் தொடர்புடைய நபர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.




