கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் நடைபெற உள்ள விசிக தமிழ்த் தேசிய எழுச்சி மாநாட்டுக்கு முதலமைச்சர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில், “விசிக மாநாடு தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றத்துக்கு புதிய திசையை அமைக்கும் வகையில் அமையட்டும்” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும், புதிய கொள்கை நோக்கங்கள் உருவாகும் தளமாக மாநாடு அமைய வேண்டும் என்றும், “தமிழும் தமிழரும் உயர்ந்து, தமிழ்நாடு வளம் பெறட்டும்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சமூக முன்னேற்றம் மற்றும் புதிய சிந்தனைகளுக்கான களமாக விசிக மாநாடு அமைய வேண்டும் என்பதே தனது எதிர்பார்ப்பு என்றும் முதலமைச்சர் விஜய் குறிப்பிட்டுள்ளார்.




