கோவை மாணவர் கொலை வழக்கு: மேலும் 8 பேருக்கு போலீஸ் வலை! பரபரப்பு தகவல்!

 

 

கோவையில் மாணவர் அமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஏற்கனவே 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 8 மாணவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

 

அமுதன் போதைப்பொருள் தொடர்பாக புகார் அளித்ததால் சக மாணவர்கள் அவரை தாக்கி கொலை செய்ததாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், இந்தக் கொலைக்கு போதைப்பொருள் விவகாரம் காரணமில்லை என போலீசார் தெரிவித்துள்ளனர்.

 

மாணவர்கள் சிலரை தாக்கி, அவர்களிடம் இருந்த செல்போனை பறித்துச் சென்ற சம்பவத்தின் தொடர்ச்சியாகவே அமுதன் கொலை செய்யப்பட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

 

இந்த வழக்கில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் 8 மாணவர்களை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். சம்பவத்தின் பின்னணி மற்றும் கொலைக்கான முழுமையான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Read Previous

அமெரிக்காவில் அதிர்ச்சி சம்பவம்! தாய், தம்பியை கொன்ற 17 வயது இளைஞர் – AI பயன்படுத்தியதாக தகவல்!

Read Next

அதிமுகவில் மீண்டும் பரபரப்பு! சி.வி.சண்முகம் வீட்டில் முன்னாள் அமைச்சர்கள் திடீர் ஆலோசனை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular