சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு!

 

 

சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆவணி மாத பூஜைகளுக்காக இன்று (ஆக.16) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது.

 

தலைமை தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் முன்னிலையில், மேல்சாந்தி பிரசாத் நம்பூதிரி நடையை திறந்து வைக்கிறார். இதையடுத்து நாளை (ஆக.17) முதல் வரும் 21-ம் தேதி வரை மாதாந்திர பூஜைகள் நடைபெற உள்ளன.

 

சிறப்பு பூஜைகளில் பங்கேற்க விரும்பும் பக்தர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வரும் 21-ம் தேதி இரவு நடை சாத்தப்பட உள்ள நிலையில், பக்தர்களின் வருகையை முன்னிட்டு காவல்துறை சார்பில் சிறப்பு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Read Previous

பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை: தந்தை கத்தியால் குத்திக்கொலை!

Read Next

உதயநிதிக்கு புதிய பொறுப்பு? திமுகவில் விரைவில் மாற்றம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular