விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே பள்ளி மாணவிக்கு காதல் தொல்லை கொடுத்ததை கண்டித்த அவரது தந்தை அய்யனார் (38) கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாணவிக்கு தொடர்ந்து தொல்லை கொடுத்ததாக கூறப்படும் பெரியசாமியை அய்யனார் கண்டித்துள்ளார். இதனால் இரு குடும்பத்தினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சம்பவத்தன்று அய்யானாரை பெரியசாமி கத்தியால் குத்தியதில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.




