ஐஸ்வர்யா லட்சுமி தனது புகைப்படங்கள் மார்பிங் செய்யப்பட்டு இணையத்தில் ஆபாச கருத்துகளுடன் பரப்பப்பட்டதால் கடுமையான மனவேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.
‘ஜகமே தந்திரம்’, ‘பொன்னியின் செல்வன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அவர், இதன் காரணமாக சமூக வலைதளங்களில் இருந்து முழுமையாக விலகியதாக கூறியுள்ளார்.
மேலும், சமூக வலைதளங்களை விட்டு விலகிய பிறகு தனக்கு மிகுந்த மன அமைதியும் நிம்மதியும் கிடைத்துள்ளதாக தெரிவித்த அவர், “யாராவது ரூ.100 கோடி கொடுத்தாலும் மீண்டும் சமூக வலைதளங்களுக்கு திரும்ப மாட்டேன்” என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.




