மும்பை புறநகர் ரயிலில் இளைஞர் மீது தாக்குதல்: பயணிகள் பாதுகாப்பு குறித்து கவலை..!!

Oplus_16908288

 

 

மும்பை புறநகர் ரயிலில், பணம் தர மறுத்த இளைஞர் ஒருவரை இரண்டு திருநங்கைகள் தாக்கியதுடன், அவரிடம் அநாகரிகமாகவும் நடந்துகொண்டதாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில், ரயில் பயணங்களின் போது இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் மீண்டும் நடைபெறுவதாக இணையவாசிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

 

மேலும், பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ரயில்வே பாதுகாப்புப் படையினர் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

Read Previous

சமூக வலைதளங்களை விட்டு விலகியதற்கான காரணத்தை பகிர்ந்த நடிகை ஐஸ்வர்யா லட்சுமி..!!

Read Next

கரப்பான் பூச்சி ஜனதா பேரணி: டெல்லியில் மெட்ரோ நிலையங்கள் மூடல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular