சாக்லேட்டை பிடுங்கிய அம்மா மீது புகார்: காவல் நிலையம் வந்த 3 வயது குழந்தை!

 

மத்திய பிரதேச மாநிலம் புர்ஹான்பூரில், தன்னிடம் இருந்த சாக்லேட்டை அம்மா பிடுங்கிக் கொண்டதால் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என 3 வயது குழந்தை காவல் நிலையத்திற்கு வந்த சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அம்மா மீது புகார் அளிக்க வேண்டும் என குழந்தை அடம்பிடித்த நிலையில், அதன் மழலைப் பேச்சை கேட்டு போலீசார் சிரித்துள்ளனர்.

பின்னர் புகார் எழுதுவது போல் நடித்த போலீசார், குழந்தையை அன்புடன் சமாதானப்படுத்தியுள்ளனர்.

தொடர்ந்து குழந்தைக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சுவாரஸ்யமான சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read Previous

வடிவேலு – பிரபுதேவா நடித்த ‘பேங் பேங்’ டீசர் நாளை வெளியீடு!

Read Next

ஜெய்ப்பூரில் பள்ளியில் உணவு சாப்பிட்ட சிறிது நேரத்தில் மாணவன் உயிரிழப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular