வடிவேலு – பிரபுதேவா நடித்த ‘பேங் பேங்’ டீசர் நாளை வெளியீடு!

 

பிரபல காமெடி நடிகர் வடிவேலு, நடிகரும் இயக்குநருமான பிரபுதேவாவுடன் இணைந்து ‘பேங் பேங்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.

சாம் ஆண்டனி இயக்கியுள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு கடந்த மே மாதம் நிறைவடைந்தது.

இந்நிலையில், ‘பேங் பேங்’ திரைப்படத்தின் டீசர் நாளை மாலை 4.56 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

வடிவேலு மற்றும் பிரபுதேவா ஏற்கனவே ‘காதலன்’, ‘எங்கள் அண்ணா’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர்.

Read Previous

மேகதாது விவகாரம்: அமைச்சர் விஸ்வநாதனுக்கு வளர்மதி கடும் எச்சரிக்கை!

Read Next

சாக்லேட்டை பிடுங்கிய அம்மா மீது புகார்: காவல் நிலையம் வந்த 3 வயது குழந்தை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular